நகைச்சுவை நடிகர் போண்டா மணி, இன்று காலை காலமானார். இதனை அறிந்த ரசிகர்களும், திரையுலகினரும், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவருக்கு போண்டா மணி என்ற பெயர் ஏன் வந்தது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இவர் சினிமாவில் வாய்ப்பு தேடும் போது, மிகவும் வருமையில் இருந்தாராம்.
அப்போது பசி எடுக்கும்போது, போண்டாவை சாப்பிட்டுக் கொள்வாராம். மேலும், நடிகர் கவுண்டமணியை குருவாக கொண்ட இவர், தனது பெயரை போண்டா மணி என்று மாற்றிக் கொண்டுள்ளாராம். இவரது உண்மையான பெயர் கேத்தீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.