மக்களவையின் எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இவர், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், மகாராஷ்டிரா தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, “2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும், 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் இடையே உள்ள 5 வருட கால இடைவெளியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கும், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு இடையே உள்ள குறுகிய கால இடைவெளியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று அதிர்ச்சி தகவலை, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், “தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை” என்றும், ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.