அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் முறை என்பது மிகவும் எளிமையானது தான். அதாவது, இந்தியாவில் மொத்தமாக 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில், 272 நாடாளுமன்ற தொகுதிகள் என்ற அதிக மொஜரிட்டியை பெற்ற கட்சியோ, கூட்டணியோ ஆட்சியை பிடிக்கும். ஆனால், அமெரிக்காவில் நடக்கும் தேர்தல் முறை என்பது, சற்று சிக்கலனாது. அங்கு, எவ்வாறு அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்க தேர்தல் நடத்தப்படுவதை சில படிகளாக பிரிக்கலாம்:-

  1. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், முதலில், தங்களது கட்சிக்குள் போட்டியிட்டு, தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், தங்களது கட்சியின் வேட்பாளராக அவர்கள் மாறுவார்கள்.
  2. பின்னர், அந்த வேட்பாளர்கள் மற்ற கட்சியின் வேட்பாளருடன் போட்டியிடுவார்கள்.
  3. ஒவ்வொரு மாநிலமும், அதன் மக்கள் தொகையின் அளவுக்கு ஏற்ப, எலக்டோரல் காலேஜ் என்ற வாக்கை வைத்திருக்கும். அமெரிக்கா முழுவதும், மொத்தமாக 538 வாக்குகள் உள்ளன.
  4. தற்போது பாப்புலர் Vote என்ற முறை நடக்கும். இங்கு தான், மக்கள் தங்களது வாக்குகளை செலுத்துவார்கள். அவ்வாறு செலுத்தும் அவர்கள், தங்களது மாகாணங்களில் போட்டியிடும், electors என்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். இதில், அதிக வாக்குகள் பெறும் நபர்களுக்கு, அந்த மாகாணத்தின் ஒட்டுமொத்த எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் சென்றுவிடும். அதாவது, நியூயார்க் மாகாணத்தில் 29 எலக்டோரல் வாக்குகள் உள்ளது. இங்கு, அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு, ஒட்டுமொத்தமாக உள்ள 29 எலக்டோரல் வாக்குகளும் சென்றுவிடும்.
  5. இவ்வாறு மற்ற அனைத்து மாகாணங்களிலும் அதிக எலக்டோரல் வாக்குகளை பெறும் அதிபர் வேட்பாளர் அல்லது கட்சி, அதிபராக பதவியேற்று ஆட்சியை பிடிக்கும். அதாவது, அமெரிக்காவில் மொத்தமாக 538 எலக்டோரல் வாக்குகள் உள்ளது.
  6. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு தான், அதிபர் யார் என்பது அறிவிக்கப்படும்.

இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, எலக்டோரல் வாக்குகள் இருக்கும். எடுத்துக் காட்டுக்கு, நியூயார்க்கில் 29 எலக்டோரல் வாக்குகள் உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தும்போது, அந்த சீட்டில் அதிபர் வேட்பாளர்களின் பெயர்கள் தான் இருக்கும்.

அவர்கள், அந்த இரண்டு பேரில் யாராவது ஒருவருக்கு வாக்குகளை செலுத்துவார்கள். அந்த வாக்குகள் எண்ணப்படும். அதில், அதிக வாக்குகளை எந்த கட்சியின் வேட்பாளர் பெறுவாரோ, அந்த கட்சிக்கு, 29 எலக்டோரல் வாக்குகள் அனைத்தும் சென்றுவிடும்.

மக்கள் வாக்கு செலுத்தும்போது வாக்கு சீட்டில் அதிபர் வேட்பாளர்களின் பெயர்கள் தான் இருக்கும். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுப்பது எலக்டர்ஸ் என்ற பிரதிநிதிகளை தான். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எலக்டர்ஸ் என்ற பிரதிநிதிகள் தான் அதிபர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த முறையின் மூலம் மக்களின் அதிக வாக்குகளை பெற்றபோதிலும், சில சமயங்களில், சில வேட்பாளர்களால் அதிபராக பதவி பெற முடியாமல் சென்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News