Connect with us

Raj News Tamil

தி கோட் படத்தில் விஜயகாந்த்.. எத்தனை நிமிடங்களுக்கு வருவார்?

சினிமா

தி கோட் படத்தில் விஜயகாந்த்.. எத்தனை நிமிடங்களுக்கு வருவார்?

விஜயின் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். அவ்வளவு ஏன், நடிகர் விஜய் பலருக்கும் தெரிந்த முகமாக மாறியதற்கும், நடிகர் விஜயகாந்த் தான் காரணம்.

செந்தூரப்பாண்டி படத்தில் இருவரும் இணைந்து நடித்த பிறகு தான், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், விஜய் பரிட்சையமான முகமாக மாறினார்.

இவ்வாறு தனது திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை போட்ட விஜயகாந்துக்கு, மரியாதை செலுத்தும் விதமாக விஜய் ஒரு காரியத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது, தற்போது நடித்து வரும் தி கோட் படத்தில், நடிகர் விஜயகாந்தை, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக, படக்குழுவினர் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், தற்போது அவர் எவ்வளவு நிமிடங்கள் திரையில் காட்சி தருவார் என்பது தொடர்பான தகவல் கசிந்திருக்கிறது. அதன்படி, கேப்டன் விஜயகாந்த், ஒரு நிமிடங்களுக்கு, திரையில் வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top