எத்தனை பொய்களை தான் சொல்வீர்கள் மோடி கார்கே கடும் விமர்சனம்..!

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 182 சட்ட மன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பேசிய கார்கே, 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடியும், அமித்ஷவும் கேட்கின்றனர். நாங்கள் ஏதும் செய்யவில்லை என்றால் நீங்கள் ஜனநாயகம் பெற்று இருக்க மாட்டீர்கள் எனக் கூறினார்.
பிரதமர் தன்னை ஏழை என்று பொய் மூட்டையாக கூறி வருகிறார் என்றார். மேலும் எத்தனை முறை தான் பொய்சொல்வீர்களோ என்று கடுமையாக சாடிய அவர், பொய்மேல் பொய் சொல்கிறார் மோடி மேலும் பொய்களின் தலைவர் மோடி என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.