ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரை கொண்டிதோப்பில் காவலர் குடியிருப்பில் குற்ற தடுப்பு பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தொடர்பில் 15 வருடங்களுக்கு மேலாக இருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய பங்கு இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர் கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார், யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் என்பதை அறிய அவருடைய இரண்டு வங்கி கணக்குகளை ஆய்வு செய்கின்றனர்.
வியாசர்பாடி மற்றும் ஓட்டேரியில் உள்ள வங்கிகளில் அஞ்சலையின் பரிவர்த்தனைகளை கேட்டு அதனை ஆய்வு செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டதாகவும் கூறப்படும் நிலையில், அஞ்சலையின் பங்கு என்ன என்பதை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டம் அஞ்சலைக்கு தெரிந்தே நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.