பேட்ட, மாறன், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், திரைப்படங்கள் தேர்வு செய்வது குறித்து, விரிவாக பேசியுள்ளார்.
அதாவது, 500 கோடி ரூபாய் வசூலிக்கும் திரைப்படமாக இருந்தாலும், தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால், அப்படத்தை தேர்வு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுமாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால், மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.