ஆரோக்கியம்
வாயில் சிறு சிறு கட்டிகள் உள்ளதா…? உங்களுக்கான தகவல் இது…!
வாய்ப்புண் பொதுவாகவே அனைவருக்குமே வருவதும், பின்பு போவதுமாக இருக்கும். ஆனால் இதனை அனைவருமே இயல்பான ஒன்றகவே கருதுகின்றனர்.
ஆனால் இது மிகப்பெறிய பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது உணர்ந்தவருக்கு தான் தெரியும். அந்த வகையில் கேன்கர் சோர்ஸ் என்று கூறப்படும் வாய்ப்புண், (mouth ulcer) வாயைச் சுற்றியும் வாயின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் தோன்றும்.
இதனால் எரிச்சல், வலி மற்றும் சாப்பிடும்போது அசௌகரியமாக உணர்வீர்கள். இந்த புண் சிவப்பு அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதன் காரணமாக உடல் உபாதைகள், அல்சர், செரிமானக் கோளாறு, , அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் வாய்ப்புண் எதனால் உறுவாகிறது என உறுதியாக கண்டுபிக்கவில்லை. ஆனால் பெரும்பாலும் புகைபிடிப்பவர்கள்,புகையிலை,கஞ்ஜா போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு தோன்றும் எனக் கூறப்படுகிறது.
நாடு வளர்ச்சியடைகிறது அதே போல் கண்ணுக்கு தெரியாத பலவிதமான நோயும் வளர்கிறது,அந்த வகையில் நம்முடைய நலத்தை நாமேதான் பேணிக்காக்கவேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
