முன்பதிவை நிறுத்துங்க…சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்…திணறும் போலீஸ்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கூட்டத்தை நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பல மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பி வருகின்றனர்.

கார்த்திகை மாதம் நிறைவடைவதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சபரி ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி மாடல் க்யூ முறையை சபரிமலை தேவசம்போர்டு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதானல் எந்த பலனும் இல்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கூட்டம் அதிகமாக உள்ளதால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் தற்போது கூட்டம் அலைமோதி வருவதால் தரிசனத்துக்கான நேரடி முன்பதிவை நிறுத்துமாறு தேவசம்போர்டுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News