Connect with us

Raj News Tamil

3 வயதில் 50 ரன்கள்.. அசத்தும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..

உலகம்

3 வயதில் 50 ரன்கள்.. அசத்தும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..

இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் நம்மை ரசிக்க வைக்கும். ஆனால், சில வீடியோக்கள் மட்டும் தான், ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதுமாதிரியான வீடியோவை பற்றிய சிறு தொகுப்பு தான் இது..

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு போட்டிகளில் முதன்மையில் இருப்பது கிரிக்கெட். இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றால், அதனை திருவிழா போல கொண்டாடுவதையும், தோற்றால் மனம் நொந்து போவதையும் வழக்கமாகவே உள்ளது.

ஆனால், அந்த இந்தியர்களின் ஆர்வத்திற்கே சவால் விடும் வகையில், 3 வயது சிறுவன் ஆச்சரியப்படுத்தியுள்ளான். அதாவது, வெளிநாட்டை சேர்ந்தவன் தான் யுகோ ஹீத். 3 வயதான இந்த சிறுவன், தான் பிறந்தது முதல் தற்போது கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைத்து, கற்றுக் கொண்டு வருகிறான்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3 வகை கிரிக்கெட் பயிற்சிகளையும் கற்றுக் கொண்டு வரும் இந்த சிறுவன், Professional கிரிக்கெட்டர்களுக்கு சவால் விடும் வகையில், Stylish-ஆகவும், நுனுக்கமாகவும் விளையாடி வருகிறார்.

இதுமட்டுமின்றி, தனது 3-வயதிலேயே 50 ரன்களை எடுத்து, சாதனையும் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோக்களை சேகரித்து யுகோ ஹீத் என்ற YouTube சேனலையும் தொடங்கி, தனது பயணத்தை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More in உலகம்

To Top