ஐஸ் கிரீமில் மனித விரல்..உணவு பாதுகாப்புத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தனர்.

தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News