ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலி மூலம் யம்மோ பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.
ஆர்டர் செய்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட போது ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தார். அவர் கூர்ந்து கவனித்தபோது, ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து யம்மே ஐஸ்கிரீம் நிறுவனம் மீது மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு ஃபேக் செய்யப்பட்ட இடத்தை போலீஸார் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.
கோன் ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் கிடந்த சம்பவம் மும்பையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.