மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ், இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்த நிலையில் தான் கடை ஒன்றை நடத்துவதற்காக பல்வேறு நபர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.
கடனை கொடுத்தவர்கள் தொடர்ந்து கேட்டுவந்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததால் அவ்வப்போது கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் தொடர் மன அழுத்தம் காரணமாக சிவப்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளர்.
சிவப்பிரகாஷின் குழந்தைகள் இருவரும் வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஜன்னல் வழியாக தாய் தூக்கில் தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் கூறியதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவசரவசரமாக இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய் தந்தை உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இருவரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போதே வீட்டிற்குள் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கம்பக்கத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.