கள்ளக்காதல் மோகம் – மனைவி மற்றும் மகள்களை தீயிட்டு கொழுத்திய கணவன்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். பிரசாத்திற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதால், அவருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், தனது காதலியுடன் வாழ்க்கையை தொடர முடியாது என்பதை அறிந்த பிரசாத், மனைவி மற்றும் மகள்களை கொலை செய்ய முயற்சித்துள்ளார். வீட்டில் தீ விபத்து நடப்பது போல் செட் செய்துவிட்டு, தனது மகள்கள் மற்றும் மனைவியை தீயிட்டு கொழுத்தியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த அவரது மனைவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், 90 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது மகள்கள் இருவரும், கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரசாத்தின் பலே திட்டத்தை கண்டறிந்து, அவரை கைது செய்துள்ளனர். காதலிக்காக, தனது மனைவி மற்றும் மகள்களை, கணவன் தீயிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.