மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபுராஜா. இவருக்கு, அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சந்தேகப் பார்வை கொண்ட பிரபுராஜா, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக தகராறு செய்து வந்ததால், கணவரை பிரிந்து, தனது பாட்டியின் ஊருக்கு, அபிராமி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், மனைவியை சந்தித்து, தன்னுடன் வாழ வருமாறு கூறியுள்ளார்.
ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த பிரபுராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து, சரமாரியாக வெட்டி வீசியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட அபிராமி, பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பிரபுராஜாவை தேடி வருகின்றனர்.