திருமணம் ஆகி 2 மாதம்.. மனைவி கர்ப்பமாகி 4 மாதம்.. கணவன் செய்த கொடூரம்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். ஓட்டுநர் தொழில் செய்து வரும் இவருக்கும், ரோஜா என்ற பெண்ணுக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே, ரோஜா கர்ப்பமாகியுள்ளார். இதற்கு பிறகு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்று உறவினர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இருவருக்கும் இடையே, சண்டையும் சச்சரவும் தான் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று இரவு, இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்த சிலம்பரசன், அவரை பிளேடால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிலம்பரசனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை கொலை செய்தற்கான காரணத்தை கூறினார்.

“எனக்கு திருமணம் ஆக 2 மாதங்கள் தான் ஆனது. ஆனால், என் மனைவி 4 மாதங்கள் கர்ப்பம் ஆனதாக கூறினார். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் தான் கொலை செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News