மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட் (39). இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களில் அல்வாரோ என்பவர் சைத்தானை வழிபாடு செய்யும் குழுவை சேர்ந்தவர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 29ம் தேதி அல்வாரோ தனது மனைவியை கொலை செய்துள்ளார். மனைவியின் மூளையை தின்று மண்டை ஓட்டை எரித்து சாம்பலாக்கியுள்ளார். பிறகு அவருடைய உடலை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டின் பின்புறமுள்ள பள்ளத்தாக்கில் வீசி உள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சைத்தானின் தொடர்ச்சியான வேண்டுகோளின் காரணமாக அவர் இந்த கொடூரமான கொலையை செய்ததாக கூறி உள்ளார்.