இருட்டான அறை.. மனைவியை 11 ஆண்டுகள் பூட்டி வைத்த கணவன்..

ஆந்திரா மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவருக்கு சாய் சுப்ரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தாய் சொல்வதை தெய்வ வாக்காக கேட்கும் மதுசூதனன், அவரது பேச்சை கேட்டு, தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

மேலும், தனது மனைவியை தனி அறையில் பூட்டி வைத்திருந்த அவர், அந்த பெண்ணை வேறு யாருடனும் பேச அனுமதிக்காமல் இருந்து வந்தார். இவ்வாறு 11 ஆண்டுகள் கொடுமைப்படுத்தி வந்த நிலையில், சாய் சுப்ரியாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவரது வீட்டிற்கு Search Warant உடன் வந்த காவல்துறையினர், வீட்டில் சோதனை செய்தனர். அங்கு, இருட்டான அறையில், மெலிந்த தேகத்துடன், மிகவும் பரிதாபமான நிலையில், அந்த பெண் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரமான கணவன், வக்கீலாகவும், மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும், இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.