வாழ மறுத்த மனைவி – ஆபாச புகைப்படத்தை அனுப்பி தொல்லை கொடுத்த கணவன்?

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பித்த இவர்களது வாழ்க்கை, நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகளுடன் தொடர்ந்துள்ளது. இப்படியோ தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்து, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருப்பினும் விடாத ராஜ்குமார், தன்னுடன் மீண்டும் வாழ வேண்டும் என்று கூறி, தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி, தனது மனைவியின் புகைப்படங்களை ஆபாச சித்தரித்து தொல்லை கொடுத்துள்ளார்.

இவ்வாறு தொல்லை கொடுப்பது கணவர் தான் என்பது தெரிந்ததும், அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் புகைப்படத்தை கணவனே தவறாக சித்தரித்து தொல்லை கொடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News