அமெரிக்கா நாட்டை சேர்ந்த சமூக வலைதள பிரபலமாக இருப்பவர் தான் மெக்கன்ஸி. இவர், பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் விஷயங்களை, Content-ஆக மாற்றி, வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளர்.
அந்த வகையில், மெக்கன்ஸியும், அவரது காதலன் கீனனும், இந்தியாவிற்கு வந்துள்ளனர். அப்போது, கீனனுக்கு, கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மெக்கன்ஸி, இந்தியாவில், முறையான சிகிச்சை கிடைக்குமா? என்று பயந்துள்ளார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாகவே, சம்பவங்கள் அனைத்தும் நடந்துள்ளது.
அதாவது, இந்தியாவில் உள்ள மருத்துவ அமைப்பு குறித்து பேசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆய்வக பரிசோதனைகளை, அமெரிக்காவில் குறிப்பிட்ட நேரத்தில் தான் எடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் தங்களது சௌகரியத்திற்கு ஏற்ற நேரங்களில், திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பது தனக்கு ஆச்சரியத்தை தருவதாக கூறியுள்ளார்.
மேலும், நாம் நேராக கிளினிக்குகளுக்கு செல்வதற்கு பதிலாக, செவிலியர்கள், நாம் இருக்கும் இடத்திற்கு வந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்து செல்கின்றனர். அதே நாளிலேயே, பரிசோதனையின் முடிவுகளையும் கூறிவிடுகின்றனர். இவ்வாறு அமெரிக்காவில் இல்லை. இது எனக்கு வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இறுதியாக, மருத்துவ வசதிகளுக்கான கட்டணம் எவ்வளவு வரப்போகிறது என்ற பயம் அவருக்கு இருந்துள்ளது. ஆனால், மருத்துவக் கட்டணம் வெறும் ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே வந்த பிறகு, அவருக்கு அந்த பயமும் நீங்கியிருக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ அமைப்புகள் அவரை ஈர்த்துள்ளது. இதனை தனது வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ, இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, வைரலாகி வருகிறது.