Connect with us

Raj News Tamil

சிம்புவுக்கு பதில் விஷ்ணு விஷால்-ஆ? இயக்குநர் சொன்னது என்ன?

சினிமா

சிம்புவுக்கு பதில் விஷ்ணு விஷால்-ஆ? இயக்குநர் சொன்னது என்ன?

சிம்பு நடிப்பில், கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படம் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படத்தில், விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.

ஆனால், இந்த தகவலுக்கு தற்போது இயக்குநர் கோகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, விஷ்ணு விஷாலை வைத்து இயக்கும் படத்திற்கும், கொரோனா குமார் படத்திற்கும், எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போது எடுக்க உள்ள படம், ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top