Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பிரச்சனையெல்லாம் மறந்துவிட்டு விஜய்யுடன் நடிக்க தயாராக உள்ளேன். பிரபல நடிகர் பேட்டி

சினிமா

பிரச்சனையெல்லாம் மறந்துவிட்டு விஜய்யுடன் நடிக்க தயாராக உள்ளேன். பிரபல நடிகர் பேட்டி

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் மறுபுறம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜய் ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் பற்றி கேட்டு வருவதால் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 67 அப்டேட் வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா , கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. நெப்போலியன் விஜய்யுடன் இணைந்து போக்கிரி படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து விஜய்யின் படங்களை கூட நெப்போலியன் பார்பதில்லையாம்.

மீண்டும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் பிரச்சனைகளெல்லாம் மறந்து தான் நடிக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top