நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்..! காரில் தொங்கிய மேயர்.. விளக்கம் கொடுத்த சேகர் பாபு ..!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதேபோன்று சென்னையின் கடலோர பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் பகுதிகளில் மீனவர்களின் படகுகள், உடைந்து சேதமாகின. இதையடுத்து புயலால் பாதிப்படைந்த பகுதிகளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மேயர் பிரியா ராஜன் ஆகியோர் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றனர். இந்த நிலையில் மேயர் பிரியா ராஜன் முகத்தை மறைத்துக்கொண்டு தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, முதல்வரின் ஆய்வின் போது தானும் செல்ல வேண்டும் என்ற துணிச்சலோடு முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் சென்றார். மேலும் இதில் பெரிது படுத்துவதற்கு ஏதும் இல்லை எனக் கூறினார்.