நடிகர் விஜயின் கடைசி படத்தை, இயக்குநர் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இவ்வாறு இருக்க, நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், விஜயின் கடைசி படத்தை, நான் தான் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால், அந்த வாய்ப்பு எச்.வினோத்திற்கு கிடைத்துவிட்டது. விஜயின் கடைசி படத்தை இயக்குவதற்கு, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். எச்.வினோத்தை கொலை செய்துவிட்டு, விஜய்யிடம் சென்று ஹெச்.
வினோத் என்னிடம் தான் உதவியாளராக பணியாற்றினார். ஆனால் தற்போது அவர் இல்லை அதனால் நான் உங்கள் படத்தை இயக்குகிறேன் எனக் கூறுவேன்” என்று சிரித்துக்கொண்டே அந்த பேட்டியில் ஜாலியாக பேசியுள்ளார்.