அதானியை நான் சந்திக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று (டிச.10) நடைபெற்ற கேள்வி நேரத்தில், தமிழ்நாட்டில் அதானி குழும முதலீடு தொடர்பாக, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்து பேசியுள்ளார்.

பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:

தமிழ்நாடு அதானியின் குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து இரண்டு மூன்று முறை விளக்கியுள்ளார். அதற்குப் பிறகும் தொடர்ந்து இது குறித்து செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது.

அதானின் முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் கற்பிக்க நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

திமுக மீது குறை சொல்லும் பாஜகவோ பாமகவோ நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக உள்ளதா? நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கி பேச நீங்கள் தயாராக உள்ளீர்களா?

தமிழ்நாட்டிற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என்னை அதானி சந்திக்கவும் இல்லை நான் அவரை பார்கவும் இல்லை. இதைவிட விளக்கம் தேவையா? என்று பதிலளித்தார்.

RELATED ARTICLES

Recent News