சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரது பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி, இந்தியா முழுவதும், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி, பல்வேறு பிரபலங்கள் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“குறும்புத்தனம் இல்லாத குழந்தை பருவம் என்பது முழுமை அடையாது.
நான் குழந்தையாக இருக்கும்போது, என் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு, கார் பார்க்கிங்கில் உள்ள டயர்களின் காற்றை பிடிங்கிவிட்டு விளையாடுவோம்.
நாங்க ரொம்ப புரொபஷனல்ஸ்.. நாளு டயரும் பஞ்சர் ஆகுற வரைக்கும் விட மாட்டோம்.
காலத்தின் பின்னோக்கி சென்று, நீங்கள் குழந்தையாக இருந்தபோது செய்த, குறும்புத்தனமான விஷயத்தை சொல்லுங்கள்.
இதற்கிடையே, நான் என் காரின் டயர்களை செக் பண்ணிட்டு வருகிறேன். ”
என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.