இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ரத்தம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்து விட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம், அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இவரது அடுத்த படமான ஹிட்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.