அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை கிரண்.
இவர் தற்போது வாய்ப்புகள் இன்றி, தவித்து வருகிறார். இந்நிலையில், பிரபலம் ஊடகம் ஒன்றிற்கு, கிரண் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சுந்தர் சி-யின் ஆம்பள படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதாவது, நான் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். அப்போது, “இயக்குநர் சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்டேன். அதன்பிறகு, அவர் ஆம்பள படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால், நான் அந்த படத்தில் செட் பிராப்பர்டி போல தான் இருந்தேன். அந்த படத்தில் நடித்தது தான் நான் செய்த தவறு” என்று கிரண் கூறினார்.