சமீபத்தில் நடிகை தமன்னா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வீரம் படத்தில், அஜித் டை அடித்திருந்தால் உங்களுக்கு மிகவும் நன்றாக மேட்ச் ஆகியிருப்பார், உங்களுக்கு அது தோன்றவில்லையா?, நீங்கள் ஏன் இதை பற்றி கேட்கவில்லை என்று தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமன்னா, ஹீரோயின்களுக்கு கேள்வி கேட்கும் சுதந்திரத்தை கொடுக்கமாட்டார்கள் என்றும், வளர்ந்து வரும் நேரம் என்பதால் தன்னாலும் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இப்போது என்றால் நேரடியாகவே அஜித்திடம், நீங்கள் டை அடித்தால் இன்னும் ஸ்மார்ட்டாக இருப்பீர்கள் என்று சொல்லியிருப்பேன் என்றும் தமன்னா கூறியுள்ளார்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.