நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இந்த சம்பவம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும், இதற்கு தங்களது கண்டனங்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களை சந்தித்து, இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை என்றும், நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக, நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.