Connect with us

Raj News Tamil

இந்தியன் 2 மீதான எதிர்பார்ப்பு.. சுக்குநூறாக உடைத்த கமல்..

சினிமா

இந்தியன் 2 மீதான எதிர்பார்ப்பு.. சுக்குநூறாக உடைத்த கமல்..

கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக, படக்குழுவினர் அனைவரும், உலகம் முழுவதும் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் கமல் ஹாசன் கலந்துக் கொண்டிருந்தார். அப்போது, இந்தியன் 2 மற்றும் 3 குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கமல், இந்தியன் 2-வை விட, 3 தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியன் 3-யில் உள்ள கதையின் காரணமாகத் தான், 2-ல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கமல் இவ்வாறு பேசியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top