நான் ஆபாசமா பேசுறதே கிடையாதுங்க…சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி

திமுகவில் பிரபல பேச்சாளராக நீண்டகாலமாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவரது பேச்சுகள் மிகவும் கொச்சையாகவும், ஆபாசமாகவும் இருப்பதால், இதனை கேட்பதற்காகவே ஒரு பெரும் கூட்டம் கூடுவது உண்டு.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மூத்த தலைவர் குஷ்பூ ஆகியோர் குறித்து சிவாஜி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 64 நாட்கள் சிறையில் இருந்த சிவாஜி அண்மையில் விடுதலை செய்யபட்டு திமுகவில் மீண்டும் இணைந்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சிவாஜி கிருஷ்ணமூரத்தி இன்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் கண்ணில் இருக்கு. கேட்பவர்களின் நெஞ்சில் இருக்கு. நான் ஆபாசமாகவே பேசுறது கிடையாதுங்க. நான் வட சென்னையில் பிறந்து வளர்ந்தவன். வட சென்னையில் எளிமையான வார்த்தைகளை தான் பயன்படுத்தணும். அப்போ தான் அவங்களுக்கு புரியும் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News