விடுதலை 2 திரைப்படம் வரும் வெள்ளிக் கிழமை அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இதனால், படத்தை புரமோஷன் செய்வதற்கு, படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு மொழியில் படத்தை புரமோஷன் செய்வதற்கு, படக்குழுவினர் சென்றுள்ளனர். அப்போது, ராம் சரணின் 16-வது படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய்சேதுபதி, “சில நேரங்களில் திரைப்படத்தின் கதை சிறப்பாக இருக்கும். ஆனால், அதில் நம்முடைய கதாபாத்திரம் வலிமை இல்லாமல் இருக்கும்.
அதனால், ஆர்.சி 16 படத்தில் நான் நடிக்கவில்லை” என்று பதில் அளித்தார். கால்ஷீட் பிரச்சனை என்று நாசூக்காக பதில் சொல்லாமல், கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று நெத்தியடி பதில் கெடுத்த இவரது பேச்சு, ரசிகர்களை கவர்ந்துள்ளது.