ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, நரகாசுரன் உள்ளிட்ட படத்திலும் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வரும் ஆத்மிகா, அவரது காதல் தோல்வியின் அனுபவங்களை பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது என்றும், நானாக காதலை முறிக்கவில்லை, என்னை காதலித்தவன் தான் முறித்துக்கொண்டு போய்விட்டார் என்றார். இதனால் பல இரவுகளில் தனியாக அழுதுள்ளேன் என்று வேதனையோடு பேசியுள்ள ஆத்மிகா, அதற்காக இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.