ஷாருக்கான் தனது பிறந்த நாளையொட்டி, கடந்த சனிக்கிழமை அன்று, ரசிகர்களை சந்தித்தார். அப்போது, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகப்படுத்திய அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், “நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு, மூச்சு திணறல் வராது என்று நினைத்தேன். ஆனால், இன்னும் அந்த பிரச்சனை உள்ளது. விரைவில் அதுவும் சரியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு நாளைக்கு நான் 100 சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். நாள் முழுவதும் சாப்பிட மாட்டேன்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.
இந்த இரண்டு விதமான வீடியோக்களும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 100 சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த நபர், தற்போது சிகரெட் பழக்கத்தை கைவிட்டுவிட்டேன் என்று கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.