Connect with us

Raj News Tamil

நான் இந்த நடிகருடன் பணியாற்ற ஆசை – லோகேஷ் கனகராஜ்

சினிமா

நான் இந்த நடிகருடன் பணியாற்ற ஆசை – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் Most Wanted இயக்குநர்களின் பட்டியலில் இருந்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறுவதால், அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று, பல்வேறு நடிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், எம்.எஸ்.பாஸ்கருடன் பணியாற்ற வேண்டும் என தனக்கு ஆசையுள்ளதாக கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சைக் கேட்ட எம்.எஸ்.பாஸ்கர், “உங்களுடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள், உடனே ஓடி வந்து விடுகிறேன்” என்று மறுமொழி கூறியிருந்தார்.

More in சினிமா

To Top