முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்! புதினின் அதிரடி அறிவிப்பு?

நேட்டோ நாடுகளின் படைகளை, உக்ரைனுக்கு வர அனுமதித்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி, சரியாக 10 மாதங்கள் முடிந்துள்ளன.

இருப்பினும், போர் நிறுத்தப்படுவதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக, ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார். புதின் இவ்வாறு பேசியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலில், விரைவில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்போம் என்றும், அனைத்து ஆயுத மோதல்களும் சில வகையான பேச்சுவார்த்தைகளுடன் முடிவடைகின்றன என்றும் புதின் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.