ஆதி,ஹன்சிகா, யோகிபாபு போன்ற பலர் நடித்து உருவாகியுள்ள படம் பார்ட்னர். சமீபத்தில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரோபோ ஷங்கர் சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவு செய்தார். அதாவது, ஹன்சிகாவின் காலை தொடுவது போன்ற காட்சியை எடுக்க இருந்தனர். ஆனால் அதற்கு ஹன்சிகா மறுத்துவிட்டதாக கூறினார். மேலும் இதுபோன்ற பாக்கியமெல்லாம் ஹீரோக்களுக்கு தான் கிடைக்கும், காமெடியன்களுக்கு கிடைக்காது என்று சலித்துக்கொண்டார்.
ரோபோ ஷங்கரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.