போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் யுவராஜ் தயாளன். இந்த படத்திற்கு பிறகு, இவர் இயக்கியுள்ள திரைப்படம் இறுகப்பற்று.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட யுவராஜ் தயாளன், சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“நான் எலி படத்தை எடுத்திருந்தபோது, செய்தியாளர்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து முடித்த பிறகு, அனைவரும் அமைதியாக இருந்தனர்.
இதை வைத்தே, அந்த திரைப்படம் சரியாக இல்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய நான், காரில் இருந்து பாதியிலேயே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
அவ்வாறு நடந்து ரொம்ப தூரம் சென்ற நான், சினிமாவில் இருந்தே தூரம் சென்றுவிட்டேன். அன்றைய தினம் நான் தூங்கியபோது, செய்தியாளர்களின் அமைதி, என்னை தூங்கவே விடவில்லை.
தற்போது, இறுகப்பற்று என்ற நல்ல படத்தை எடுத்து வந்துள்ளேன். டீசரை பாராட்டியதோடு மட்டும் நிற்காமல், படத்தையும், திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்”
இவ்வாறு அவர் கூறினார்.