Connect with us

Raj News Tamil

நாடாளுமன்றத்தின் நான் அசாம் மக்களின் சிப்பாயாக இருப்பேன்: ராகுல் காந்தி!

இந்தியா

நாடாளுமன்றத்தின் நான் அசாம் மக்களின் சிப்பாயாக இருப்பேன்: ராகுல் காந்தி!

வெள்ளத்தால் பாதித்துள்ள அசாம் மற்றும் இன கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஒரு நாள் பயணமாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார்.

முதலில் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கேட்டறிந்த ராகுல் அதைத்தொடர்ந்து மணிப்போருக்கு சென்றுள்ள பல்வேறு முகாம்களில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இதற்கிடையில் அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தியிடம் அசாம் வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அசாம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள அதீத பேரழிவு மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவினாஷ் எனும் 8 வயது குழந்தை உட்பட பல குழந்தைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் வெள்ளப் பெருக்கில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 53,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 24,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

“வெள்ளம் இல்லாத அசாம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே இந்த எண்கள் பிரதிபலிக்கின்றன.

அசாமுக்கு விரிவான மற்றும் இரக்கமுள்ள ஒரு பார்வை தேவை. சரியான நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு மற்றும் நீண்ட காலத்துக்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம்.

அசாம் மக்களுடன் நான் நிற்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் அவர்களின் சிப்பாயாக இருப்பேன். மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top