மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலக போவதாக தகவல்கள் வெளியாகியது.
இதையடுத்து பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதிலை என பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு அங்கு பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.