“இதைவிட பெரிய கௌரவம் வேறு இல்லை” – ஓபனாக சொன்ன கௌதம் கம்பீர்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, ராகுல் ட்ராவிட் பதவி வகித்து வருகிறார். வரும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, இவரது பதவிக்காலம் முடிய உள்ளது. இதனால், அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கு, இந்திய கிரிக்கெட் ஆணையம், விண்ணப்பங்களை பெற்று வந்தது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி வரும் மே 27-ஆம் தேதி என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த பதவிக்கு, தோனி, வெளிநாட்டு வீரர் ஸ்டீபன் ஃலெமிங், கௌதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டிருந்தது.

இதில் குறிப்பாக, கௌதம் கம்பீர் இந்த பதவியை பெறுவதற்கு, அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், என்னதான் ஆர்வம் காட்டி வந்தாலும், இப்போது வரை அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தரா? இல்லையா என்பது? தெளிவாக இல்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, அபுதாபியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவன் ஒருவர், இந்திய தலைமை பயிற்சியாளர் பதவி குறித்தும், அதில் கௌதம் கம்பீரின் பார்வை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கம்பீர், “இந்த கேள்விக்கு நான் பதில் வழங்கியது இல்லை. இருந்தாலும், பல்வேறு தரப்பினர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது நான் உனக்கு பதில் சொல்கிறேன்.

இந்த 140 கோடி இந்தியர்களும், உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு உதவுவார்கள். அதாவது, யாராவது எங்களுக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கினால், நாங்கள் விளையாட தொடங்கினால், இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க நான் ஆசைப்படுகிறேன். உங்களுடைய தேசிய அணியை பயிற்சிவிப்பதை காட்டிலும், எனக்கு வேறு பெரிய மரியாதை இல்லை” என்று பேசி, தலைமை பயிற்சியாளர் பதவியின் மீது உள்ள தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், கம்பீருக்கு ஆதரவாக பேசியிருந்தார். மேலும், “அவர் பதவிக்கு சிறந்த ஆள்” என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News