பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்று இருந்தவர் சுஜாதா கார்த்திகேயன். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பி.ஜே.டி கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, சுஜாதா கார்த்திகேயனுக்கான செல்வாக்கு என்பது குறைந்துக் கொண்டே சென்றது.
மேலும், பாஜக ஆட்சியை கைப்பற்றிய பிறகு, நிதித்துறையின் சிறப்பு செயலாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதற்கிடையே, குழந்தைகள் வளர்ப்பு காரணங்களுக்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், 6 மாத ஓய்வில் சுஜாதா சென்றிருந்தார்.
அந்த ஓய்வு காலம் முடிந்த பிறகு, அதனை நீட்டிக்க வேண்டும் என்று கேரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்ததோடு, நவம்பர் மாதம் பணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், சுஜாதா கார்த்திகேயன், தனது பதவியில் இருந்து விருப்பு ஓய்வு பெறுவதாக, கடந்த மார்ச் 13-ஆம் தேதி அன்று, தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். இதற்கு, தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், 3 மாத கட்டாய அறிவிப்பு காலத்தை பூர்த்தி செய்துவிட்டு, பணியில் இருந்து விருப்பு ஓய்வு பெற்றுக் கொல்லலாம் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுஜாதா கார்த்திகேயன், நவீன் பட்நாயக்கின் வலது கரமாக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.