14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்…..ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம்

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நில அதிர்வு நடவடிக்கையால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு சிறு நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கங்களாக மாறும் என்றும் இதனால் எரிமலை வெடிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் சுமார் 4,000 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகளவாக 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தொடர் நிலநடுக்கம் மற்றும் அவசர நிலை பிரகடனம் காரணமாக ஐஸ்லாந்தின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான The Blue Lagoon geothermal spa தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஐஸ்லாந்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News