“புரோட்டீன் பவுடர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்” – அதிர்ச்சி தகவலை கூறிய ஐ.சி.எம்.ஆர்

புரதச் சத்து என்பது, நமது உடலை வலுவானதாக கட்டமைப்பதற்கான செங்கல் போன்றது.நமது உடலின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகவும் இது உள்ளது.

உடலில் உள்ள தசைகளை வளர வைத்து, வயதான தோற்றம் ஏற்படுவதை தடுப்பது மட்டுமின்றி, உடல் எடை குறைப்புக்கும் உதவி செய்கிறது. இவ்வாறு இருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளின் படி, நாம் அனைவரும் புரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புரோட்டீன் பவுடர்களில், அதிகப்படியான சர்க்கரைகள், கலோரிகள் இல்லாத சுவையூட்டிகள், செயற்கை ஃப்லேவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதால், எலும்புகள் வலுவிழந்து போதல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தவிர, அதிகப்படியான புரோட்டீன் பவுடர்களின் பயன்பாடு, செரிமான பிரச்சனை, முகப்பரு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு உயருதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையில் இருந்து கிடைக்கக் கூடிய புரத உணவுகளை உண்ணலாம் என்றும், இந்த இயற்கை புரத உணவுகளில் மற்ற முக்கியமான ஊட்டசத்துக்களும் கிடைக்கிறது என்றும், ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

இயற்கை புரத உணவுகளில் சில:-

முட்டை, பாதாம், கோழி இறைச்சி, பால், தயிர், பருப்பு வகைகள், மீன்கள் போன்ற புரத உணவுகளை உண்ணலாம்.

பின்பற்ற வேண்டிய மேலும் சில வழிமுறைகள்:-

தமது உடலுக்கு தேவையான புரத சத்துக்களை, நாம் உணவு உண்ணும் அனைத்து வேளைகளிலும் சரியான அளவில் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கார்போஃஹடை்ரேட் மற்றும் நல்ல கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கக் கூடாது. இயற்கை உணவுப் பொருட்களை உள்ளடக்கிய ஒரு சமநிலையான டயட், நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் கொடுத்து, உடல் ஆரோக்கியத்திற்கும், ஃபிட்னஸ் கோலை அடையவும் உதவும்.

ஒரு சிறந்த, தகுதிவாய்ந்த ஊட்டசத்து நிபுணரை அனுகி, உங்களது தனிப்பட்ட தேவைகள் மற்றும் உடல்நலத்தை பொறுத்து, நல்லதொரு டயட்டை உருவாக்குங்கள்.

RELATED ARTICLES

Recent News