7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய்சேதுபதி படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. ஆண்டுக்கு 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு உருவான திரைப்படம், 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, விஷ்னு விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் இடம் பொருள் ஏவல்.

இந்த படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், படத்தை வெளியிட முடியாத சூழல் இருந்தது. தற்போது, பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதால், படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.