இட்லி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி. மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றான இது, குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாக அறியப்படுகிறது. ஜப்பானில் இருந்து தமிழகத்திற்கு வந்த இட்லி, தற்போது தமிழர்களின் பூர்வீக உணவாகவே மாறியுள்ளது.

ஆனால், அன்மைக் காலங்களில், பல்வேறு உணவகங்களில், இந்த உட்லி உணவு விஷமாக மாறி வருகிறதாம். அதாவது, இட்லி தட்டில் மாவை ஊற்றுவதற்கு முன், அதில் துணி ஒன்றை வைத்து, அதில் தான் மாவை ஊற்றுவார்கள். அப்போது தான் இட்லி வெந்த பிறகு, எடுப்பதற்கு எளிமையாக இருக்கும்.

ஆனால், சமீப காலங்களாக, அந்த துணிக்கு பதிலாக, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறார்கள். இதில், ஸ்டைரீன் ( styrene ) , பைஃபீனால் ( biphenol ) போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் கலக்கப்படுகிறது.

இந்த ரசாயணங்கள் உடலில் சேர்ந்தால், புற்றுநோய், இதயநோய், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இட்லி பிரியர்கள் மத்தியில், இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.