நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். இப்போது நேரு குடும்பமே என்னை அம்பானி-அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில்தான் நான் அக்கறையும் கவலையும் கொள்கிறேன். ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் தற்போது அமலாக்கத்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது.
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.