Connect with us

Raj News Tamil

காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: மாநகராட்சி ஆணையர்!

தமிழகம்

காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: மாநகராட்சி ஆணையர்!

3 நாட்கள் வரை காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலவேம்பு, கபசுர குடிநீர் ஆகியவை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3 நாட்கள் வரை காய்ச்சல் இருந்தால் மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

3 நாட்கள் வரை காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலி மனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் நீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். சாக்கடை, குப்பையில் இதர நோய் வருவது போல் வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும். அதனால், பொதுமக்கள் அதனைத் தடுத்து டெங்குவைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top