தலைமை கட்டாயப்படுத்தினால் தேர்தலில் போட்டி துரை வைகோ..!

நெல்லையில் மதிமுக நிர்வாகி செல்வகோபால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்திய, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மத வாத சக்தியைகளை எதிர்க்க அனைத்து கட்சிகளையும் எதிர்க்கும் பணியை பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றாலும், கட்சி வற்புறுத்தினால் நிற்கப்போவதாக தெரிவித்தார்.